பேராண்மை திரை விமர்சனம்.

29/10/2009 at 2:01 முப 4 பின்னூட்டங்கள்

peranmai-photos-02

இது வழக்கம் போல அடுத்த நாட்டு தீவிரவாதிகளின் சதியை முறியடிக்கும் கேப்டன் விஜயகாந்த்,அர்ஜுன் போன்றோர்களுக்கு என்றான தீவிரவாதிகளை ஒடுக்கும் கதை கரு தான் என்றாலும் இதன் கதைகளமும், கதாபாத்திரங்களும் தமிழுக்கு புதிது,வரவேற்க்க தக்கது.
இந்தியாவின் பசுமை 1 என்ற ராக்கெட்டை தகற்க்கும் திட்டத்துடன் இந்திய காட்டுக்குள் ஊடுருவிய அண்ணிய நாட்டு தீவிரவாதிகளின் சதி திட்டத்தை காட்டிலே பிறந்து வளர்ந்த பழங்குடி வகுப்பை சேர்ந்த காட்ட்டிலாக்கா அதிகாரியாக் வரும் துருவன் என்ற கதாபாத்திரம் எப்படி தகர்க்கிறார் என்பது தான் கதை..

இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவெனில்–
கதை புதிதல்ல தான் ,அதே வேளையில் இது வேரொரு நாட்டில் வந்த ஹாலிவுட் படம் என்பதும் உண்மையே ,ஆனால் தான் எடுத்துகொண்ட இந்த கதையின் மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை சற்று ஆழ்ந்து  கவணிக்க வேண்டும்.–
வனத்திலே பிறந்து வளர்ந்து ஒரு நல்ல தகுதியான  காட்டு இலாக்கா அதிகாரியானாலும்  அவன் ஒரு பழங்குடி எனவே  அந்த அதிகாரியிடம் பயிற்சி பெற முடியாது என்று சொல்லும் அந்த ஐந்து மாணவிகளின் மூலமும்,

ஒருவன் என்ன உயர்ந்த நிலைக்கு வந்தாலும் சமுதாயம் அவன் வந்த சமூகத்தை வைத்து தான் அவனுக்கு சமூகத்தில் மரியாதை என்பதும் துருவனுக்கு மேல் அதிகாரியாக வரும் பாத்திரம் துருவனின் உறவிரனர்களின் வீடுகளை அடித்து அவர்களை காட்டைவிட்டே விரட்டும் போது -இவனுங்களை பாருடா பொருளாதாரம் படிக்கிறானுங்க ,உலக அரசியல் படிக்குரானுங்க ,இவனுஙகள இப்படியே விட்டா நம்மள காலி பன்னிடுவானுங்க என்று வரும் வசனங்களிலும்,

என்னங்கடா அரசு,அதிகாரம் நு சொல்லிகிட்டு சர்வாதிகாரம் பன்னுரீங்க?  உழைக்கும் மக்களின் கைக்கு  ஒரு நாள் அதிகாரம் வரும் ,அப்போ அதிகாரம் ,அரசு என்ற போர்வையில் உள்ள உங்க சர்வாதிகாரம் ஒழிந்தே தீரும் டா என்ற வசனங்களிலும்
பொதுவுடைமை பார்வை கொண்டுள்ள இயக்குனர் பாராட்டுக்குரியவர்..

முடிவில் அந்த அடர்ந்த காட்டுக்குள் தன் பிறந்து வளர்ந்த அந்த அனுபவத்தை கொண்டு அவ்வளவு பெரிய சாதனையை செய்து வரும் துருவனை விட்டு அவனுக்கு மேலதிகாரியாக இருந்தார் என்ற காரணத்திற்க்காக கேல் ரத்தினா விருதை வேரொருவருக்கு கொடுக்கும் அரசின் நிலைபாட்டை யதார்த்த நடைமுறை உண்மையை போட்டு உடைத்த வகையிலும் பாரட்டுக்குரியவர் இயக்குனர்..

ஆண்மை  எனற சொல்லுக்கு வீரன், பராக்கிரமசாலி,நாணனயமானவன் ,நேர்மையானவன்,என்று தமிழ் அகராதி கூருகிறது

பேராண்மை என்ற சொல்லுக்கு பிரண்மனை நோக்காமை என்று திருவள்ளுவர் கூருகிறார்

ஆனால்
பேராண்மை என்றால் அதுவல்ல   பேரா(ஆ)ண்மை  –அதாவது விருது கிடைக்க பெற  வேண்டியவன் துருவன் ,கேல்ரத்தினா விருது  வாங்குபவன் வேரொருவன் , இது காலம் காலமாய்  ஒடுக்கபட்ட சமூகத்தை சேர்ந்த ஒவ்வொரு அரசு ஊழியனுக்கும் ,  சாதனையாளனுக்கும் ,பாராட்டுக்கும் உரித்தான ஒடுக்கப்பட்டவர்களுக்கு  நடக்கும் இருட்டடிப்பு என்று இந்த படத்தின் கதாநாயக பாத்திரம் மூலம் பேராண்மைக்கு பொதுவுடைமை சித்தாந்த முறையில் அர்த்தம் சொன்ன இயக்குனர்
தமிழ் சினிமாவிற்க்கு கிடைத்த வரம்.

இது போன்ற சினிமாவை வரவேற்ப்போம்.

Advertisements

Entry filed under: திரைவிமர்சனம்.

சிவராத்திரி….. மறைபொருள்.

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. புனிதன்  |  2:25 முப இல் 29/10/2009

  மிகவும் அருமை,

  எந்த மாதுரி கண்ணோட்டத்துடன் ஒரு விசயத்தை பார்க்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்,நாலு பாட்டு ,கருத்து சொல்ரேனு காமெடி க்கு இது புதிய கோணம் தான்.நான் நிச்சயம் இன்னொரு முறை பார்க்கிறேன்

  நன்றி தோழா

  மறுமொழி
 • 2. °ღ•தமிழ்மணி•ღ°  |  2:27 முப இல் 29/10/2009

  வரவேற்க்கப்பட வேண்டிய கருத்து.

  நல்ல விமர்சனமும் கூட, வாழ்த்துக்கள் முத்துக்குமார்.

  மறுமொழி
 • 3. NithiChellam  |  2:52 பிப இல் 29/10/2009

  என்னங்கடா அரசு,அதிகாரம் நு சொல்லிகிட்டு சர்வாதிகாரம் பன்னுரீங்க? உழைக்கும் மக்களின் கைக்கு ஒரு நாள் அதிகாரம் வரும் ,அப்போ அதிகாரம் ,அரசு என்ற போர்வையில் உள்ள உங்க சர்வாதிகாரம் ஒழிந்தே தீரும் டா என்ற வசனங்களிலும்
  பொதுவுடைமை பார்வை கொண்டுள்ள இயக்குனர் பாராட்டுக்குரியவர்..///

  hmm super

  மறுமொழி
 • 4. tamizhanban  |  5:47 பிப இல் 13/11/2009

  பேராண்மை என்றால் அதுவல்ல பேரா(ஆ)ண்மை –அதாவது விருது கிடைக்க பெற வேண்டியவன் துருவன் ,கேல்ரத்தினா விருது வாங்குபவன் வேரொருவன் , இது காலம் காலமாய் ஒடுக்கபட்ட சமூகத்தை சேர்ந்த ஒவ்வொரு அரசு ஊழியனுக்கும் , சாதனையாளனுக்கும் ,பாராட்டுக்கும் உரித்தான ஒடுக்கப்பட்டவர்களுக்கு நடக்கும் இருட்டடிப்பு என்று இந்த படத்தின் கதாநாயக பாத்திரம் மூலம் பேராண்மைக்கு பொதுவுடைமை சித்தாந்த முறையில் அர்த்தம் சொன்ன இயக்குனர்
  //////////////////////////////////////////////

  மிக அருமை முத்துகுமார். பேராண்மை பற்றி எத்தனையோ விமர்சனங்கள் அவற்றில் மிகச்சிறந்த விமர்சனமாக இருக்கிறது.

  ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞன் முட்டிமோதி வெளியே வரும்பொழுது அவனை துன்புறுத்த எத்தனை பேர் காத்திருப்பார்கள் என்று இந்தப்படம் தெளிவாக கூறுகிறது.

  “படிக்கலைன்னாத்தான் அடிப்பாங்க இவுங்க படிச்சா அடிக்கிறாங்களே!” என்ற வசனம் நிதர்சனத்தை தெளிவாக உணர்த்துகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் படிப்பதை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்று.

  எனக்கு முதலில் தோன்றியது வெளிநாட்டு சக்திகளை எதிர்த்து இவ்வளவு தீரத்துடன் போராடும் துருவன் தன் மேலதிகாரியை தட்டி கேட்கும் தைரியம் இல்லாதவனாக இருக்கிறானே என்று. துருவன் என்ற பாத்திரம் தான் தட்டி கேட்காமல் பார்வையாளர்கள் அனைவரையும் தட்டி கேட்க வைத்து விட்டான்.

  இந்திய தேசியத்தை நாம் நேசித்தாலும் அவர்கள் நம்மை நேசிக்கவில்லை மாறாக சர்வாதிகாரத்தை நம்மீது ஏவிவிட தயாராக இருக்கிறார்கள் என்று இந்திய தேசியத்தை இப்படம் தோலுரித்து காட்டுகிறது.

  தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்!

  தமிழன்பன்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.

.


%d bloggers like this: