தலாய் லாமா..

24/01/2010 at 11:13 பிப 2 பின்னூட்டங்கள்

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ..என்று புவனா ஒரு கேள்வி குறி (?) என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் வரும் ,அது இந்த 14 ஆம் தலாய்லாமா டென்சின் கியாட்சோ க்கு பொருந்தும் . உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் 60 லட்சம் திபெத்தியர்களின் நம்பிக்கையை பெற்ற மன்னர் மற்றும் மத தலைவர் இந்த டென்சின் கியாட்சோ..இப்படி தன் சொந்த நாட்டை விட்டு அடுத்த நாட்டில் தஞ்சமடைய என்ன காரணம் என்று பார்ப்போம் .முதலில் திபெத் -ன் வரலாற்றைப் பார்ப்போம்

திபெத்

மத்திய ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம். அந்நிலம் சார்ந்த மக்களான திபெத்தியர்களின் தாயகம். ஏறத்தாழ 4,900 மீட்டர் (16,000அடி) ஏற்றம் கொண்ட இந்தப் பகுதி, உலகின் மிக உயரத்தில் அமைந்தது என்பதால் அதை “உலகத்தின் கூரை” என்று பொதுவாக குறிப்பிடுவார்கள்.புவியல்படி, திபெத், நடுவண் ஆசியாவின் ஒரு பகுதி என்று யுனெஸ்க்கோ, மற்றும் பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கருத, சில கல்விசார் நிறுவனங்கள், கேள்விக்கு உரியதாக, அது தெற்க்காசியாவின் பகுதியாகக் கருதுகிறார்கள். தற்போது இதன் பெரும்பாலான பகுதிகள் திபெத் தன்னாட்சி பகுதி என்ற பெயரில் சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக விளங்குகிறது.

திபெத்தின் பல பகுதிகளை ஏழாம் நூற்றாண்டில் சாங்ட்சன் கேம்போ (Songtsän Gampo) எனும் அரசர் ஒருங்கிணைத்தார். 1600 இன் தொடக்க காலத்தில் இருந்து தலாய் லாமாக்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் ஆன்மீக தலைவர்கள், திபெத்திய மைய நிருவாகத்தின் தலைமையை பெயரளவிலாவது ஏற்றிருந்தார்கள். இவர்கள், அவலோகிதர் என்ற போதிசமத்துவ தருமத்தின் வெளிப்பாடுகளாக நம்பப்படுகிறார்கள்.

1644 முதல் 1912 வரை சீனாவை ஆண்ட மஞ்சூரிய அரசு, 1571 இல், தலாய் லாமாவை திபெத்தின் அரசியல் மற்றும் ஆன்மீக தலைவராக ஏற்படுத்தியது.17 ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை, தலாய் லாமாவும் அவரது பிரதிநிதிகளும் வழிவழி தலைநகரான லாசாவை இருப்பிடமாக கொண்டு திபெத்தின் பெரும்பகுதியின் அரசியல் அதிகாரம் பெற்றவராக, மதம் மற்றும் நிர்வாக பணி செய்துவந்தார்கள்.

19 ம் நூற்றாண்டில் விக்டோரியா ராணிக்கும் ருஸ்யாவின் ஜார் மன்னர்களுக்கும் இடையே, நடுவண் ஆசியாவில், நடந்த ஆதிக்க போட்டியில், பிரான்சிஸ் யன்ங்ஹஸ்பண்ட் (Francis Younghusband) என்ற கவர்ச்சியான போர்மறவரின் தலைமையில் ஒரு பிரிட்டிஷ் படை இறுதியாக திபெத்தில் உள்புகுந்து, திபெத்தின் படைவீரர்களை மாக்சிம் துப்பாக்கி கொண்டு வீழ்த்தி, 1904 இல் லாசாவை கைப்பற்றியது. இந்த படையெடுப்பு, பிரித்தானியாவுக்கும் திபெத்துக்கும் ஓர் அமைதி உடன்பாடு ஏற்பாட்டுக்கு வழி செய்தது. சில திபெத் வரலாற்றாளர்கள், இந்த தொலைதூர மலைநாடு ஒரு தனிநாடு என்பதற்கு, இந்த உடன்பாட்டை ஆதாரமாக காண்பார்கள். இந்த படையெடுப்பால் சீனப் பேரரசு கொதிதெழுந்தாலும், அதை நிறுத்த ஒன்றும் செய்ய இயலாமல், திபெத்தின் மேல் தனது கோரிக்கையை காக்கும் வண்ணம், பிரிட்டனுடன் ஓர் அரசுறவு (diplomatic) போராட்டம் நடத்தியது.

திபெத் 1911 இல் சீனாவிடம் இருந்து விடுதலை அறிவிப்பு செய்தது. ஆனால், எந்த ஒரு மேற்கத்திய நாடும் அதன் விடுதலைக்கு ஆதரவாக வரவோ அல்லது தூதரக உறவு வைத்துக்கொள்ளவோ ஒருபோதும் முன்வரவில்லை. சீன மக்கள் குடியரசு, வரலாற்று பதிவுகளை சுட்டிக்காட்டியும், திபெத்திய அரசுடன் 1951 இல், பதினேழு அம்ச உடன்பாட்டை கையொப்பம் பெற்றும், திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக கோரிக் கொண்டது.

1912-1950 காலப்பகுதிகளில் பாவிக்கப்பட்ட திபெத்திய கொடி. இது 1912 இல் 13 வது தலாய் லாமாவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கொடி மக்கள் சீன குடியரசில் தடை செய்யப்பட்டுள்ளது

திபெத்தில் சீனாவின் தலைமைக்கு  கட்டுப்படாத பல ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பதற்கு வரலாலற்றுப் பதிவுகள் உள்ளன. ஆனால் சீனர்களோ, அவரது பேரரசின் தூதர்கள் 1727  இல் இருந்தே இருப்பதால், லாசா சீனப்பேரரசுக்கு கட்டுப்படவேண்டும் என்கிறார்கள்.

1914இல் கூட்டியசிம்லா மாநாடு , யாங்ட்சி (Yangtze) ஆறும் இமயமும் திபெத்தின் எல்லைகளாக அமைத்தன. ஆனால் சீனா திபெத்தின்மேல் உள்ள தன் ஆதிக்கத்தை கோர ஓயவில்லை. அடுத்த 35 ஆண்டுகளில் அவர்கள் கையாண்ட வித்தைகள், திபெத்தின் தனிநாட்டுக்கு, பன்னாட்டு ஆதரவு கிட்டாமல் போனது.

1949-50 களில், சீன மக்கள் குடியரசு ஏற்படுத்திய உடனேயே, தலைவர் மா சே துங், மக்கள் விடுதலை படை கொண்டு, திபெத்தை விடுவிக்க ஆணை இட்டார். திபெத்தின் பல பிரபுக்களும், பாட்டாளிகளும் சீன அரசுக்கு ஒத்துழைத்தனர். என்றாலும் நில சீர்திருத்தங்களாலும், மற்றும் புத்த மதம் தொடர்பாகவும் சண்டைகள் தோன்றின. 1959 இல் தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் பெற்றார் 1972 இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்  மாவோவுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள முடிவெடுக்கும் வரை சி.ஐ.ஏ உளவு நிறுவனம் மறைமுக கொறில்லா போருக்கு நிதி உதவி செய்து வந்தது. பஞ்சம், மற்றும் கலாச்சார புரட்சிக் காலத்தில் சீனாவின் வன்முறைக்கு, திபெத்தின் எதிர்ப்பு வலுப்பட்டாலும் பயனின்றி போயின

தற்காலத்தில், உலகின் எல்லா நாடுகளும் திபெத்தின்மேல் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளன. புலம்பெயர்ந்து அமைந்த திபெத்திய அரசின் தலைவரான தலாய் லாமா, திபெத்தில் சீனாவின் இறையாண்மையை மறுக்கவில்லை. “திபெத் தனிநாடு கேட்கவில்லை. தன்னாட்சிதான் கேட்கிறது.” ஆனால் சீனர்களோ அவரோடு பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை என்று முன்னிலும் திடமாக இருக்கிறார்கள்.

தலாய் லாமா

ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ என்பது இவரது இயற்ப்பெயர்.

ஜுலை 6-1935 ல்  திபெத்தின் 14 ஆம் தலாய் லாமாஆனார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார். இவரே திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இதை ஏற்றுக் கொள்ள வில்லை. 1958 ஆண்டு திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் தர்மசாலாவிற்க்கு புகலிடம் வந்து வாழ்கிறார்.

இவர் ஆன்மீகம் அரசியல் துறைகளில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர். ஆன்மீகத்தை அறிவியல் எங்கு பிழை என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கிறதோ அதை ஆன்மீகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று The Universe in a Single Atom என்ற அவரது ஆங்கில நூலில் குறிப்பிடுக்கிறார். இவர் தியானம் குறித்த பரிசோதனை கூட  ஆராய்ச்சிகளிலும் தமது  ஒத்துழைப்பை   வழங்கியிருக்கிறார்.

Advertisements

Entry filed under: தலாய் லாமா.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்.. ஒரு பார்வை.. அங்காடித் தெரு… திரை விமர்சனம்.

2 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.

.


%d bloggers like this: