Archive for ஏப்ரல், 2011

வரலாற்றில் இந்தியாவின் இடம் எது?

பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபோதோ, சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோதோ, உங்களால் என்ன செய்திருக்க முடியும்? ஒன்றுமே செய்திருக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் அப்போது என்ன நினைத்தீர்கள் என்பதும், என்ன சொன்னீர்கள் என்பதும் முக்கியம். காலம் அதைக் குறித்துவைத்திருக்கும்!

 வரலாறு என்பது எப்போதுமே இப்படித்தான். அரபு உலகில் இப்போது அதுதான் நடக்கிறது. இந்த எளிய புரிதல் இந்தியாவுக்கு இருக்கிறதா?

துனிஷியாவின் ஸைன் அல் எபிடைன் பென் அலி; எகிப்தின் ஹோஸ்னி முபாரக்; லிபியாவின் மம்மர் கடாபி… இவர்கள் எவருமே மேற்கு உலகுக்கு எதிரிகள் அல்ல… குறிப்பாக அமெரிக்காவுக்கு!

உலகின் பெட்ரோலியச் சுரங்கமான அரபு உலகின் இத்தகைய சர்வாதிகாரிகளே – மக்கள் நலனுக்கு எதிரானவர்களே – தங்களுடைய பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, மேற்கு உலகின் அடிவருடிகளாக இருப்பவர்களே – அமெரிக்க, ஜரோப்பிய ஆளும் வர்க்கத்தின் நெருக்கமான நண்பர்கள். ஆகையால்,

மத்தியக் கிழக்கின் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக மேற்கு உலகம் ஆடும் ஆட்டம், ஒரு முற்போக்கு நடவடிக்கையோ, தன்னெழுச்சி நடவடிக்கையோ அல்ல; அது ஒரு நிர்பந்தம். அரபு மக்களின் வெறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கும் எண்ணெய் அரசியல் தங்கள் பிடியில் இருந்து கைநழுவி விடாமல் இருப்பதற்குமான கடைசி வழி அது. அதே சமயம், மனிதாபிமான அடிப்படையிலும் ஜனநாயக அடிப்படையிலும்  பார்த்தால்… கால தாமதமான நடவடிக்கை!

இத்தகைய சூழலில் இந்தியா என்ன செய்யலாம்? சர்வதிகாரத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் குரலாவது கொடுக்க வேண்டாமா? ஆனால், நாம் தொடர்ந்து எதிர்மறையாக – மௌனத்தையே பதிலாகத் தந்துகொண்டு இருக்கிறோம்.

எகிப்துப் புரட்சியின்போது, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இப்படிச் சொன்னார்: ”இத்தகைய சூழல்களின்போது நாம் நிலைப்பாடு எடுப்பது இல்லை!”

எண்ணிப் பாருங்கள், சுதந்திர எகிப்தியர்கள், இந்தியர்களை வரலாற்றில் எந்த இடத்தில் வைப்பார்கள்?

.

ஐ.நா. சபை, லிபிய வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும் தீர்மானம் கொண்டுவந்தபோது, அந்தத் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்த இந்தியாவின் தூதர் ஹர்தீப் சிங் இப்படிச் சொன்னார்: ”இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான போதிய காரணங்கள் சொல்லப்படவில்லை!”

எண்ணிப் பாருங்கள், எதிர் வரும் சுதந்திர லிபியா இந்தியாவை வரலாற்றில் எந்த இடத்தில் வைக்கும்?

இப்போது சீனாவில் சானியா நகரில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு) மாநாட்டிலும் பிரதமர் மன்மோகன் சிங் வழக்கம்போல மௌனத்தை உதிர்த்து வந்திருக்கிறார்.

இதோ, ஏமனிலும் சிரியாவிலும் ஜோர்டானிலும் படுகொலைகள் தொடங்கிவிட்டன. அங்கே இருந்து வரும் மரண ஓலத்துக்கும் நாம் எதிர்க் குரல் கொடுக்கப் போவது இல்லை.

  அன்று சோவியத் ஒன்றியம் ஆஃப்கனை ஆக்கிரமித்தபோதும்… நேற்று ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோதும்… இன்று ஏமனிலும் சிரியாவிலும் நடக்கும் படுகொலைகளின்போதும்… இந்தியாவின் நிலைப்பாடு மௌனம்தான் என்றால், வரலாற்றில் நம்முடைய இடம் எது?

கை கட்டி, வாய் பொத்தி, வேடிக்கை பார்ப்பதுதான் நம்முடைய நிலைப்பாடு என்றால், ஜ.நா. சபையின் பாதுகாப்பு அவையில் நமக்கு எதற்கு நிரந்தர இடம்?

.

நன்றி—- ஆனந்த விகடன் 27-ஏப்ரல் -2011


Advertisements

23/04/2011 at 10:10 பிப பின்னூட்டமொன்றை இடுக

அன்னா ஹசாரே..

 

அன்னா ஹசாரே..வின் — போராட்டம் வெற்றி பெற வாழ்த்துவோம்.

இந்த சம கால சமூகப் போராளியைப் பற்றி..,

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் ‘மாதிரி சிற்றூர்’ என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை…

* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், ‘அன்னா ஹசாரே’ என்று அழைக்கப்படுபவர்.

* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.

* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.

கிராம மேம்பாட்டுப் பணி…

* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.

பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.

* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.

* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.

* 1998-ல் சிவசேனா – பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தகவல் அறியும் சட்டம்…

* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்…

நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.

இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.

இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.

லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.

அன்னா ஹசாரேவின் வலைத்தளம் : http://www.annahazare.org/

 

07/04/2011 at 11:03 பிப 1 மறுமொழி


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.