Archive for பிப்ரவரி, 2012

அறிவாளி-முட்டாள்.

சென்னையில் -பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்.

அறிவாளிக்கும் முட்டாளுக்கும் உள்ள வித்தியாசம் விஷய ஞானம் அல்ல, தன்னடக்கமும் சுயக்கட்டுபாடும் தான்.

Advertisements

29/02/2012 at 9:28 பிப பின்னூட்டமொன்றை இடுக

வாக்களிக்க விருப்பமில்லையா?

 49 ஒ சட்டம் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு விளக்கம்;-

ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும்.
ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் நூற்றுக்கு 45 பேர் ஓட்டு போடுவதில்லை.

ஏன் ஓட்டு போடுவதில்லை என்று கேட்டால் பல பேர் சொல்லும் காரணம் இதுதான். “எந்த வேட்பாளரும் சரியில்லை; இருப்பதில் ஒருத்தருக்கும் ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை,” என்று சொல்லுகிறார்கள்.

அப்படி நினைப்பவர்களும் கூட போய் ஓட்டு போட முடியும். சட்டத்தில் அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.அதுதான் 49 ஓ.எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு.

வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

29/02/2012 at 7:43 முப பின்னூட்டமொன்றை இடுக

வீடியோக்களிலிருந்து ஒலியை(mp3) மட்டும் பெற..

வீடியோக்களிலிருந்து ஒலியை மட்டும் (எம்பி3) வடிவில் பெற..

mp3

யூ டியுப் (http://youtube.com ) யாவரும் அறிந்த இணையதளம்.

இங்கு வீடியோ எனப்படும் ஒலி,ஒளிக் கோப்புகள் காணக்கிடைக்கின்றன.யாவரும் தம் கோப்புகளை எளிதில் பதிவேற்றவும்,பதிவிறக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் உள்ள ஒளி,ஒலிக் கோப்பு(வீடியோ)களிலிருந்து ஒலியை மட்டும் எம்பி3 வடிவில் பிரித்தெடுக்க ஒரு இணையதளம் பயன்படுகிறது.

http://listentoyoutube.com/

இவ்விணையதளத்துக்குச் சென்று நாம் மாற்ற வேண்டிய பாடலின் url முகவரியை அழுத்தி  சொடுக்கினால் சிறிது நேரத்தில் பதிவிறக்கம் எனத் தோன்றும்.அதனைப் பதிவிறக்கும் போது அக்கோப்பு எம்பி3 வடிவில் கிடைக்கிறது.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

28/02/2012 at 6:54 பிப 2 பின்னூட்டங்கள்

புவி வெப்பம் அடைவது ஏன்?


குளிர் நாடுகளில் தாவரங்களுக்கு அதிகமான வெப்பம் தேவைப்படுவதால் கண்ணாடி வீட்டிற்குள் (green house) செடிகளை வளர்க்கிறார்கள். கண்ணாடி வெப்பத்தை எளிதில் கடத்துவது இல்லை. கண்ணாடி வீட்டிற்குள் புகுந்த வெப்பம் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் கண்ணாடி வீட்டிற்குள் எப்போதும் வெப்பம் அதிகமாகவே இருக்கும்.

நாம் வாழும் பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனை வைத்திருக்கிறது. பூமி அதிகமாக சூடாகிவிடாமலும், அதிகமாக குளிர்ச்சியடைந்து விடாமலும் சம நிலையை இந்த காற்று மண்டலம்தான் ஏற்படுத்துகிறது.

நம்முடைய உடலுக்கு சட்டை எப்படியோ அதைப்போல பூமிக்கு காற்று மண்டலம்தான் சட்டையாக இருக்கிறது. காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் ஆகிய வாயுக்களும் இருக்கின்றன.

இந்த வாயுக்கள் கண்ணாடியைப்போல செயல்படுவதால் பசுமைக்குடில் வாயுக்கள் (greenhouse gases) என்று பெயர் வைத்திருக்கிறோம்.

சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தை மண், நீர், உயிரிகள் இவையெல்லாம் உறிஞ்சிக் கொள்கின்றன. உறிஞ்சிக்கொண்டவை போக மீதமுள்ள வெப்பம் பசுமைக்குடில் வாயுக்களால் வான்வெளிக்கே திருப்பிவிடப்படுகிறது. வான்வெளியில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அளவு அதிகரிக்கும்போது, பூமிப்பரப்பை நோக்கி திருப்பப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் பூமி இயல்பைவிட அதிகமாக வெப்பமடைகிறது.

புவிவெப்பமடைவது இன்றைய உலகத்தின் தலையாய பிரச்சினையாகிப் போனது இப்படித்தான். இதைத் தவிர்க்க வேண்டுமானால், காற்று மண்டலத்திற்குள் தொழிற்சாலைப் புகை, வாகனக் புகை மூலம் மனிதகுலம் துப்பும் பசுமைக்குடில் வாயுக்களை குறைக்க வேண்டும்.

இன்னும் அறிந்து கொள்ள: http://www.epa.gov/climatechange/kids/version2.html

28/02/2012 at 7:50 முப பின்னூட்டமொன்றை இடுக

சுதந்திரமானவன் யார்?

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறானோ,யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ,
அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ.அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்.

–புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.

27/02/2012 at 8:12 முப பின்னூட்டமொன்றை இடுக

பதினாறு பேறுகள் !

16 பேறுகள் !

பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க என்பார்களே அந்த
பதினாறு பேறுகள் இவை தான்..

புகழ்
கல்வி
ஆற்றல்
வெற்றி

நன்மைகள்
பொன்
தானியம்
அழகு

இளமை
நல்வாழ்வு
அறிவு
பெருமை

துணிவு
நோயின்மை
நுகர்ச்சி
நீண்ட வாழ்வு.

இவைகள் தான் அவை , எல்லோரும் இந்த பதினாறு பேறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க !

26/02/2012 at 8:15 முப பின்னூட்டமொன்றை இடுக

தோல்வி==>வெற்றி.

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. – லெனின்

25/02/2012 at 9:56 பிப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.