சென்னையில் பஸ் தினம்.

16/02/2012 at 9:33 பிப 1 மறுமொழி

chennai bus day..
சென்னையில் பஸ் தினம் என்ற பைத்தியக்காரத்தனம்

சென்னையில் கல்லூரி மாணவர்களின் பேருந்து தினம் அனைவரும் அறிந்ததே. அது தேவையா? என்று அனைவரும் முனுமுனுப்பதோடு அதற்கான எதிர்ப்பு குரல் அடங்கிவிடும். உண்மையில் இது தேவையா? மாணவர்களின் இந்த அலப்பரையும் ஆர்ப்பாட்டமும் உயிருக்கு எந்த நேரமும் ஊறு விளைவிக்கும் என்று கூட அறியாத வயதா? இது கொடுக்கும் சந்தோசம் அப்படி என்ன -ஒரு பெற்றோரின் கனவை நிறைவேற்றிவிட போகிறதா? மாணவர்களின் இந்த பஸ் தினத்தில் அந்த பஸ்ஸில் மாணவர்கள் ஆட்டம் போட்டு கொண்டாடும் அந்த சமயம் அந்த பேருந்து செல்லும் வழியில் செல்லும் மற்ற வாகனங்களின் நிலை எவ்வளவு அபாயகரமானது. இதை மாணவ சமுதாய ஓட்டுக்காக அங்கீகரிக்கும் அரசியவாதிகளை ஒதுக்கி வைத்து நீதிமன்றம் தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்து சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகள் எந்த அளவுக்கு சாலை விதிகளை மதிக்கிறது என்று மாநகர போக்குவரத்து நிர்வாக இயக்குனரும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தலைவரும் அலுவலகம் விட்டு வெளியே வந்து கவனிக்க வேண்டும்.

எந்த மாநக பேருந்து ஓட்டுனரும் சாலை விதிகளை மதிப்பதில்லை, அவர்களை சிக்னலில் நிற்கும் காவல்துறை ஆய்வாளரும் பெரிதாக கண்டுக் கொள்வதில்லை. சாலை விதிகள் பொதுமக்களுக்கு மட்டும் தானா? பேருந்து ஓட்டுனர்களின் விதி மீறல்களால் எவரின் உயிருக்கும் ஊறு விளையும் இதையும் கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Advertisements

Entry filed under: Uncategorized.

ஆய கலைகள் 64.. பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

1 பின்னூட்டம் Add your own

  • 1. துளசி கோபால்  |  5:55 முப இல் 17/02/2012

    இதெல்லாம் ஒரு முப்பது வருசங்களுக்கு முன்னே கிடையாது. ஒரு நாள் பஸ்ஸுலே ஏறிக் கூத்தாடிட்டா மகிழ்ச்சி கிடைச்சுருதா?

    அவர்கள் தினமும் போகும் பஸ் ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் சின்னதா பரிசுப்பொருட்கள், பூங்கொத்துகள் கொடுத்து மரியாதை செஞ்சால் எவ்வளவு நல்லா இருக்கும். ஹூம்….. என்னமோ போங்க. எல்லாத்துலேயும் அரசியல்…..

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.

.


%d bloggers like this: