Archive for மார்ச், 2012

மனிதனாக நீ இல்லாவிட்டாலும்..

ஒரு வீட்டில் எஜமானர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்கிறார். காவலுக்கு நிற்கிறது கம்பீரமான நாய் ஒன்று.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு ஒரு திருடன் அந்த வீட்டு வாசலுக்கு வருகிறான். நாய் இருப்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறான். நின்று நோட்டம் பார்க்கையில், நாயும் அவனைப் பார்க்கிறது. குரைக்காமல்.

குரைக்காத நாய் கடிக்காது என்றவனுக்கு யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

ஆக, இந்த நாய் விவரமானது என்றுணர்கிறான். கையோடு கொண்டு வந்த நெய்யில் பொரிக்கப்பட்ட இறைச்சித் துண்டு ஒன்றை நடுவில் போடுகிறான்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிதன், எதையோ போட்டதுமே சுதாரிக்கிறது நாய். மெதுவாக அந்தப் பொருளை நுகர்கிறது.

அவ்வளவுதான். அடுத்த நொடி அந்த மனிதன் மீது விழுந்து கடித்துக் குதறுகிறது. அதன் தாக்குதலை சமாளிக்க முடியாத அந்தத் திருடன் நிலைகுலைந்து போகிறான். ஒருவாறு கடிபட்டவாறே தடுத்து அந்த நாயைப் பார்த்து வினவுகிறான்:

‘ஏன் நாயே.. நான் உன்னைப் பார்த்த போதே குரைத்து என்னை
எச்சரித்திருந்தால் நான் ஓடிப் போயிருக்க மாட்டேனா..’ என்கிறான்.

நாய் சொல்கிறது: ‘நான் உன்னைப் பார்த்து குரைக்காததன் காரணம் நீ சாதாரண மனிதனா அல்லது திருடனா தெரியாததால்தான். அதனால்தான் உன்னைப் பார்த்துக் குரைக்காமல் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எப்போது என்னைக் கவர நீ ஓர் இறைச்சித் துண்டைப் போட்டாயோ.. அப்போதே நீ கயவனென்றறிந்தேன். ஆகவேதான் உன்னைத் துரத்தினேன்’ என்று சொன்னதாம்!

‘தன்னை மயக்க இறைச்சித் துண்டைப் போட்டாலும் சுதாரித்துக் கொண்ட நாயைப் போல மாறாமல்

ஓட்டுக்கு பணம் வாங்கிகொண்டு நன்றி என்ற போர்வையில் சிக்கி தரம் கெட்ட வனை எம் எல் ஏ , எம் பி ஆக்கி ஐந்து வருடம் படாத பாடு படும் தமிழினமே மனிதனாக நீ இல்லாவிட்டாலும் இந்த நாயை போலவாவது சுதாரித்து கொள்.

Advertisements

31/03/2012 at 7:40 முப 3 பின்னூட்டங்கள்

எந்த வீட்டுக்குப் போவது?


ஒருமுறை முல்லாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
பதிவு செய்யப்பட்டிருந்தது

பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தது.
ஆனால் அதைநிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை.

முல்லாவில் வழக்கறிஞர், “நீ அமைதியாக இரு.ஒரு வார்த்தைகூட
பேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

முல்லாவும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளே
அமைதியாக இருந்ததால் ஒரு புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “சாட்சிகள் இல்லாத்தால் உன்மீதான
குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்,”… என்றார்.

அதுவரை அமைதியாக இருந்த முல்லா, வழக்கு வெற்றியாக
முடிந்த மகிழ்ச்சியில்” நீதிபதி அவர்களே! எந்த வீட்டுக்கு
நான் போவது?” என்று கேட்டார்.

## ஐந்து வருடம் புலம்பிவிட்டு யாருக்கு ஓட்டு போட என்று குலம்பும் தமிழனும் முல்லாவும் ஒன்று தானே?

30/03/2012 at 9:50 பிப பின்னூட்டமொன்றை இடுக

வாழ்க்கை.

வாழ்க்கை.

ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்று இரண்டு நிஜங்களும்!

28/03/2012 at 10:10 பிப பின்னூட்டமொன்றை இடுக

சாதிப்பவன்..

சலித்துக்கொள்பவன்
ஒவ்வொறு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தை பார்க்கிறான்,

சாதிப்பவன்
ஒவ்வொறு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான் !

28/03/2012 at 10:08 பிப பின்னூட்டமொன்றை இடுக

எது உமது கொள்கை?

ஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளது அந்த உரிமை தன்னுரிமை(சுயநிர்ணய உரிமை)—லெனின்.

.

ஈழம் விஷயத்தில் கம்யூனிச கொள்கையை ஆதாரமாக கொண்ட மார்க்ஸிஸ்டுகளுக்கு மட்டும் உடன்பாடு இல்லாமல் போனது தான் அபத்தம்.உலகில் எங்கோ நடக்கும் அநியாயத்தை கண்டால் கொதிப்பவனே ஒரு பொது நலவாதியாக இருக்க முடியும்.

ஆனால் கூப்பிடு தூரமான ஈழத்தில் இத்தனை கொடுமையான மனித உரிமை மீறல்களையும் கண்டு எனக்கென்ன என்று இருக்கும் மா-கம்யூனிஸ்ட்டுக்களே நீங்க எந்த புரட்சியை கையில் எடுக்க போறீங்க?  வெறும் பத்து அல்லது பனிரெண்டு எம் எல் ஏக்களை கொண்டு  நீங்கள் சமூகத்திற்க்கு சாதிச்ச , சாதிக்க போவது தான் என்ன?

5 க்கும் 10 க்கும் அம்மாகிட்டயும் விஜயகாந்திகிட்டயும் தட்டேந்தி நிற்க்கும் உங்களுக்கு தெரியுமா இந்தியாவில் உஙகளுக்கான …மணி அடித்துவிட்டது என்பது?


மா-கம்யூனிஸ்ட்டுக்களே
மேலே உள்ள படம் தான் மனிதநேயம் . குறைந்த பட்சம் இதையாவது தெரிந்துக்கொள்ளுங்கள்.

18/03/2012 at 10:01 பிப 2 பின்னூட்டங்கள்

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ! வாலண்டினா.

1961 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரிககாரின் ‘மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன்’ என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வாலெண்டினா திரஸ்கோவா தேர்வு செய்யப்பட்டார்.

‘வோஸ்டாக்-6’ என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963 ஜூலை 16 ம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது. பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணிநேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார் வாலெண்டினா. விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்த விண்வெளி வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார் வாலெண்டினா.

ஜூன் 19 ம் தேதி விண்கலம் பூமிநோக்கி பாய்ந்து வந்தபோது தரையிரங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து பாதுகாப்பாக இறங்கினார் வாலெண்டினா. ‘ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்’ என்ற மெடலுடன் ‘லெனின் விருது’ மற்றும் பல விருதுகள் குவிந்தன. இந்த வெற்றி அத்தனையையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அர்ப்பணித்தார் வாலெண்டினா.

08/03/2012 at 5:23 பிப 2 பின்னூட்டங்கள்

யார் சிறந்தவர்?


*தகுதி தகுதியின்மை இரண்டுக்கும் மேம்பட்டு இந்த உலகத்தை நன்றாக உணர்ந்து நெறிமுறையுடன் வாழ்பவனே சிறந்தவன்.

07/03/2012 at 8:59 முப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.