Archive for ஓகஸ்ட், 2012

வாழ்வை அர்த்தப்படுத்துபவை !

குழந்தையின் முதல் சிரிப்பு முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு(மழலை) குழந்தை தரும் முதல் முத்தம்..

சில உணர்வுகள் பகிர முடியாதவை !
வாழ்வை அர்த்தப்படுத்துபவை !!

 

14/08/2012 at 7:58 பிப பின்னூட்டமொன்றை இடுக

போலீஸ் வேலை.

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை,
வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.

எப்படி இருந்த பழமொழியை எப்படி ஆக்கிட்டானுங்க..உண்மையான விளக்கம் இது தான்..

போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை.
வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

12/08/2012 at 9:10 பிப பின்னூட்டமொன்றை இடுக

திருவிழா !

அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

12/08/2012 at 9:08 பிப பின்னூட்டமொன்றை இடுக

ஏன் அழுதார்?

முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.

அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை
எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு
எனது அத்தை இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன்
50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு
எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”

கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.

12/08/2012 at 9:05 பிப பின்னூட்டமொன்றை இடுக

அனுபவம் ?


நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன,
ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து
கிடைக்கிறது.

11/08/2012 at 8:16 பிப பின்னூட்டமொன்றை இடுக

வாழ்க்கை இவ்வளவு தான் !

வலியது வெல்லும் !

11/08/2012 at 1:56 பிப பின்னூட்டமொன்றை இடுக

வெற்றிக்கான வழி !

தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பக்குவமும் தான் வெற்றிக்கான வழி !

—லெனின்

11/08/2012 at 1:50 பிப பின்னூட்டமொன்றை இடுக

அருமையும் தேவையும் !

விதைத்தவனுக்கு மட்டுமே புரியும் முளைத்த செடியின் அருமையும் தேவையும் !

-மன்னை முத்துக்குமார்.

11/08/2012 at 9:44 முப பின்னூட்டமொன்றை இடுக

வெற்றிக்கான மூலதனங்கள் !

உயர்ந்த குறிக்கோளும், தெளிந்த சிந்தனையும், செயலாக்கமும், தன்னம்பிக்கையும் தான் வெற்றிக்கான மூலதனங்கள் !

11/08/2012 at 9:41 முப பின்னூட்டமொன்றை இடுக

நட !

உனது ஒவ்வொறு அடியிலும் பொது நலம் மட்டுமே குறிக்கோளாக இருந்தால் பின்னால் கோடி பாதங்கள் எப்பவும் வந்து கொண்டிருக்கும் !

08/08/2012 at 8:10 பிப பின்னூட்டமொன்றை இடுக

ஒத்துழைப்பு !

“ஒத்துழைப்பு”

விருப்பமின்றி செய்யும் செயலுக்கு மற்றுமொறு பெயர் !

–மன்னை முத்துக்குமார்.

07/08/2012 at 8:57 முப பின்னூட்டமொன்றை இடுக

நம்மை /நமக்கு !

06/08/2012 at 7:29 முப பின்னூட்டமொன்றை இடுக

நம்பிக்கையே வலியது !

அன்பை காட்டிலும் நம்பிக்கையே வலியது !

-மன்னை முத்துக்குமார்.

06/08/2012 at 7:22 முப பின்னூட்டமொன்றை இடுக

பத்திரப்படுத்துங்கள் !

இது போன்ற
உங்களது புகைப்படங்களைப்
பத்திரப்படுத்துங்கள் !

சாய்வு நாற்காலியில் அமர்ந்து
வாழ்ந்த கணக்கை திருப்பி பார்த்தால்

இவை மட்டுமாவது மிச்சம் இருக்கும். !!

– மன்னை முத்துக்குமார்.

05/08/2012 at 8:07 பிப பின்னூட்டமொன்றை இடுக

இயல்பாய் இரு !

இயல்பாய் இரு !
அதுவே நிதர்சனம்.
நடிப்பது போலித்தனம் !!
நல்லவனாய் இருப்பவனெல்லாம் நல்ல நடிகனே!!!

– மன்னை முத்துக்குமார்.

05/08/2012 at 7:58 பிப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.