ஆண்களின் ஏழு பருவங்கள்…

பாலன்

மீளி

மறவோன்

திறவோன்

காளை

விடலை

முதுமகன்

*

04/04/2014 at 5:57 பிப பின்னூட்டமொன்றை இடுக

நவீன இழப்புகள் !

6546

கணிணீயும்
கைப்பேசியும்
வந்தபின்
கலையிழந்து போனது ;

பேனாவும்
தபால் காரர்
உத்தியோகமும் !

-மன்னை முத்துக்குமார்.

16/03/2013 at 5:13 பிப பின்னூட்டமொன்றை இடுக

மகிழ்வு !

smuthukumaran.wordpress.com

கந்தலுடையுடன்
யாசிக்குமொருவனுக்கு
பசியாற உணவிட்டபின் ,
உளமார கைக்கூப்பிய போது
கிடைத்த மகிழ்வு ;

எத்தனை பெரிய
மனிதர்களை சந்திக்கும் போதும்,
கைகுலுக்கும் போதும்
ஏனோ கிடைப்பதில்லை !

– மன்னை  முத்துக்குமார்.

14/03/2013 at 3:55 பிப பின்னூட்டமொன்றை இடுக

அழிக்க மனமில்லை !

mannai muthukumar

அழிக்க மனமில்லை ,
உடலளவில் மறைந்து ;
மனதளவில் நிறைந்து இருக்கும்
நண்பனின் கைப்பேசி எண் !

-மன்னை முத்துக்குமார்.

14/03/2013 at 1:13 பிப பின்னூட்டமொன்றை இடுக

அன்பு எனப்படுவது…

tt

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.

ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.

கேட்டபோது சொன்னாள்

“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்

“அன்பு என்றால் இதுதான்”.

12/03/2013 at 10:25 பிப பின்னூட்டமொன்றை இடுக

குப்பை தொட்டியானது ..

bbdf

26/01/2013 at 3:17 பிப பின்னூட்டமொன்றை இடுக

பஞ்சமன் யார் ?

பாரதியாரிடம் ஒருமுறை ஒருவர் கேட்டாராம், ஏன்டா சுப்பு, பிரம்மனோட  வாயில் இருந்து பிறந்தவன் பிராமணன்,நெஞ்சில் இருந்து பிறந்தவன் சத்திரியன் (அரசர்கள்) வயிற்றில் இருந்து பிறந்தவன் வைஷ்யன், காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன் -ன்றானுங்களே,

இந்த பஞ்சமன் எங்கிருந்து -டா பிறந்தான் ?  னு கேட்டாராம்.

அதுக்கு பாரதியார் –அதுவாய்யா… அவன் ஒருத்தன் தான் அவன் அம்மா அப்பா வுக்கு பிறந்தான் -ன்னாராம்.

கேட்டவர் ஓடியே விட்டாராம்.

08/10/2012 at 8:22 முப பின்னூட்டமொன்றை இடுக

சமயோசித புத்தி..

சமயோசித புத்தி என்பது இது தான் . கதையை படிங்க.

ஒரு அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.

அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார். அந்த ஏழை சொன்னான்,” அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.” அரசனுக்கு கோபம் வந்து விட்டது.” நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?’ என்று கத்தினான்.

உடனே ஏழை சொன்னான்,” அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.” அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான். உடனே சொன்னான்,” இல்லை, இல்லை, நீ பொய் சொல்லவில்லை.” என்று அவசரமாக மறுத்தான்.

ஏழை சொன்னான்,” நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,”

அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

08/10/2012 at 8:14 முப பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வை அர்த்தப்படுத்துபவை !

குழந்தையின் முதல் சிரிப்பு முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு(மழலை) குழந்தை தரும் முதல் முத்தம்..

சில உணர்வுகள் பகிர முடியாதவை !
வாழ்வை அர்த்தப்படுத்துபவை !!

 

14/08/2012 at 7:58 பிப பின்னூட்டமொன்றை இடுக

போலீஸ் வேலை.

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை,
வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.

எப்படி இருந்த பழமொழியை எப்படி ஆக்கிட்டானுங்க..உண்மையான விளக்கம் இது தான்..

போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை.
வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

12/08/2012 at 9:10 பிப பின்னூட்டமொன்றை இடுக

திருவிழா !

அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

12/08/2012 at 9:08 பிப பின்னூட்டமொன்றை இடுக

ஏன் அழுதார்?

முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.

அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை
எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு
எனது அத்தை இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன்
50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு
எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”

கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.

12/08/2012 at 9:05 பிப பின்னூட்டமொன்றை இடுக

அனுபவம் ?


நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன,
ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து
கிடைக்கிறது.

11/08/2012 at 8:16 பிப பின்னூட்டமொன்றை இடுக

வாழ்க்கை இவ்வளவு தான் !

வலியது வெல்லும் !

11/08/2012 at 1:56 பிப பின்னூட்டமொன்றை இடுக

வெற்றிக்கான வழி !

தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பக்குவமும் தான் வெற்றிக்கான வழி !

—லெனின்

11/08/2012 at 1:50 பிப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.

.